மாதம் ஒரு மந்திரம்.

ஒரு மனிதன் நிறைவாழ்வு பல்வேறு குணாதிசயங்கள் குணங்களை பெறுவதற்கு நூலறிவு தேவை. அனுபவ நல்லோர் தொடர்பு தேவைமேலாக இறை அனுகூலம் அவசியம் தேவை.


புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடுசாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புவன்மை போன்ற உயர் குணங்கள் அனைத்தும் ஒருவனுக்கு அமையும்பொழுதே, அவன் போற்றப்படுகிறான். அவனே தலைமைப் பதவி அடைய முடியும். சாதாரணமாக மேற்சொன்ன குணங் கள் எல்லாம் ஒரே இடத்தில் அமை யாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லா மல் இருப்பான். பெரிய பலசாலி புத்தி யில்லாமல் இருப் பான். இரண்டும் இருந்தாலும் கோழை யாக, பயந்தாங் கொள்ளியாக இருப் பான்.


எத்தனை திறமை இருந்தாலும் அவற்றை பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம் பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்கு தெரிந்ததை எடுத்துச் சொல்லுகிற வாக்கு வன்மை இல்லாமல் இருப்பான்.


 


 



இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்சநேயர். காரணம்... சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள், சக்திகள் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருந்தன. இருக்கின்றன.


நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவை கூட, அவரிடம் ஸ்வபாவமாக சேர்ந்திருந்தன. உதாரணமாக பெரிய பலசாலிக்கு வினயம் இருக்காது. பெரிய ஆக்காது, புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இருக்காது.


ஆக்காது, ஆஞ்சநேயரோ, தேகபலம், புத்திபலம் இவற்றைப் போலவே வினயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார்.


வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு. அவனுக்கு பக்தி இருக்காது. பக்தி இருக்கிறவனுக்கே கூட அதில் ஞானத்தின் தெளிவு இல்லாமல் மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஆஞ்சநேயரோ ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பரம பக்தராக இருக்கும்பொழுதே பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி சனகாதி முனிவர்களை - முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சநேய சுவாமியை முன்னால் வைத்துக்கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று வைதேஹீஸகிதம் சுலோகம் சொல்கிறது.


பைசாச பாஷை யில் கீதைக்கு தத்துவ மயமான ஒரு பாஷ்யம் (விளக்கவுரை) இருப் பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட தத்துவ ஞானி அவர். ஒன்பது வியாகரணமும் (இலக்கணம்) தெரிந்த நவவ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவிற்கு பெரிய கல்விமான்.


ஞானத்தில் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில் உச்ச நிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்ச நிலை... இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய சுவாமிதான். இதற்கெல்லாம் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். க்ஷணம் கூட காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். அவரை நமது தமிழ்நாட்டில் பொதுவாக அனுமார் என்போம். கன்னடச் சீமையில் அவரே ஹனுமந்தையா. ஆந்திர மாநிலத்தில் ஆஞ்சநேயலு என்பார்கள். மகாராஷ்டிரத்தில் மாருதி என்று அழைத்துக் கொண்டாடுவர்.