ஜாதிட வித்யா வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஜெம் கற்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவும், கடவுளர், பிரபுக்கள், செல்வந்தர்கள் மட்டுமின்றி அனைவரும் ஜெம் கற்கள் அணிந்து அமைதியும், ஆனந்தமும் பெறவும், போலியான கற்கள் வாங்குவதை தவிர்த்து - இயற்கையான, குற்றமற்ற, சுத்தமான கற்களை வாங்கிடவும், மிகவும் விலை உயர்ந்த கற்களை வாங்கும் போது அவற்றிற்கான தரச்சான்றிதழ் பெற்றே கற்களை வாங்கிட வேண்டியும் இக்கட்டுரையினை தொடர்ந்து எழுதி வருகிறேன்.
உலகின் பல்வேறு நாடுகளில் ஜெம் கற்கள் மற்றும் குவார்ட்ஸ் கற்கள் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, உலகின் பண்டைய நாடுகளில் பயன் படுத்தி வந்தனர். இந்தியாவில் கோல்கொண்டாவில் உலகின் முதல் வைரச் சுரங்கம் தோன்றியது. உடலில் இயங்கும் சக்கரங்கள் பற்றியும் நமது நாட்டினரே முதன் முதலில் அறிந்திருந்தனர். சக்கரா எனும் சமஸ்கிருத சொல்லையே உலகெங்கும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். எல்லா நாடுகளிலும் முதன் முதலில் வணங்கிய தெய்வம் பாம்பு ஆகும். கிரேக்கர்கள் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய கற்களில் ஒன்றான சர்பன்டைன் எனும் பெயரும் சர்பா (Surpha) எனும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே உருவானது என குறிப்பிடப்படுகின்றது.
நாம் அனைவரும் வைராக்கியம் மிகுந்தவர்கள் என்பதால் வைரம் அணிந்தோம். வைரமுத்து, வைரப்பெருமாள் போன்ற பெயர்களும் நமது முன்னோர்கள் வைத்தவையாகும். வைரத்தின் வகைகள், நிறங்கள், குணநலன்கள், மருத்துவத்தில் அது பயன்படும் விதம், இயற்கையான வைரத்தை எவ்வாறு காண்பது என்பவனவற்றை எந்த உபகரணங்கள் இல்லாமலும் தெரிந்து வைத்திருந்தனர். இன்றளவும் வைரத்திற்கென உலகில் மிகப்பெரிய சந்தை உள்ளது.
தற்போது பல்வேறு கற்கள் வைரத்தைவிட விலை அதிகமாக இருந்தாலும், காட்டிற்கு சிங்கம் எவ்வாறு ராஜாவோ அது போன்றே ரத்தினங்களின் ராஜா மாணிக்கம் ஒன்றே. நமது முன்னோர் தமது குழந்தைகளுக்கு மாணிக்கம், மாணிக்கவாசகம், மாணிக்காயி என பெயரிட்டு மகிழ்ந்தனர். மேலும் திருமாளின் நிழற்கொடையான தாமரையை ஒத்த நிறத்தை உடைய மாணிக்கத்திற்கு பத்மராஜா
எனப் பெயரிட்டும் , செம்பருத்தி நிறம், மாதுளை முத்து நிறம், புறா இரத்தம் என பல நிறங்களில் இருப்பதாக தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய கால கட்டங்களில் சன் ரைஸ், சன் செட் ஆகிய ரூபிகள் பர்மா நாட்டில் கிடைப்பன சிறந்தவையாக கருதப்படுகிறது.
வைரத்திற்கு அடுத்தபடியான கடினத்தன்மையும் ஜோதிட உலகில் பெரிதும் மதிக்கப்படுவதும், விலை உயர்ந்ததும் ஆன புஷ்பராகம். நமது முன்னோர்கள் தமது குழந்தைகளுக்கு புஷ்பம், புஷ்பராஜ், புஷ்பவனம் என்பன போன்ற பெயரிட்டு மகிழ்ந்தனர்.
நீலக்கடலை ஒத்த அடர் நீல புஷ்பராகத்திற்கு ஜாதி நீலம் எனவும், மேகம் போன்று வெளிர் நீலம் கொண்ட புஷ்பராகத்திற்கு இந்திர நீலம் எனவும் பெயரிட்டு உபயோகப்படுத்தி வந்தனர். அமெரிக்காவில் நீல புஷ்பராகத்தை விரும்பி வாங்குவர். உலக அளவில் ஜுலை மாதத்தில் பிறந்தவர்கள் அனைத்து நிறங்களிலுமுள்ள புஷ்பராக கற்களை அணிந்து வருகின்றனர். மஞ்சள் புஷ்பராகம் குருவுக்கு உகந்தது. இதனை கனக புஷ்பராம் என அழைக்கின்றனர்.
ஜெம் கற்களில் முக்கியமாக வைரமும், ஜிர்கானும் நிலத்துக்கடியில் 200 அடி ஆழத்தில் கிடைக்கின்றன. நிலத்துக்கடியிலும், மழைக் காலங்களில் நிலத்தின் மேற்பரப்பிலும், சுரங்கங்களிலும் (MINES) மலைகளிலிருந்தும் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போதும் இரத்தினங்கள் கிடைக்கின்றன. தாய்லாந்து நாட்டில் ஆற்றிலிருந்து இவ்வாறே கற்கள் கிடைக்கப்பெற்றன.
ஆழ்கடலிலும், சில நாடுகளில் கடற்கரை மேற்பரப்பிலும் இயற்கையான கற்கள் காணப்படுகின்றன. ஜோதிடர்கள் இயற்கையான, குற்றமற்ற கற்களையே சான்றிதழுக்கு பரிந்துரைக்கப்படுகிறனர்.
எவர்கிரீன் எக்ஸ்போர்ட்ஸ் , ' - பெ.சம்பத்குமார், எம்.ஏ.,எம்.எட். கரூர்-639005 Cell: 98653 53346 Whatsapp: 82808 13346 E.mail: evergreensam@gmail.com