ஞான முழுக்கம்
மனிதன் தன் வாழ்க்கையில் சொந்த அனுபவத்தின் வாயிலாகவே சில முக்கிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைப் பருவம் கனவுபோல் போய்விடுகிறது. காலப்போக்கில் உடன் விளையாடிய நண்பர்கள் எங்கெங்கோ சென்று விடுகின்றனர். இளமைக் காலம் சிறிது இன்பம் அளிப்பதுபோல் தோன்றுகிறது. அதைத் தொடர்ந்து முதுமை வந்துவிடுகிறது. அவரவர்களின் ப்ராரப்தவசத்தால் மனைவி, குழந்தைகளை இழக்க நேரிடுகிறது. செல்வமும் நிலைத்திருப்பதில்லை. அவ்வாறு இருக்க ஏன் கர்வமும், பொய் அபிமானமும் கொள்ள வேண்டும்?
தர்மத்தின் சிறப்பைக் குறித்து நம் முன்னோர்கள் கூறும்பொழுது, ஒருவன் செய்யும் தர்மமும் அதனால் வரும் புகழும் அவன் இருக்கும்போதும் இறந்த பிறகும் நிலையாக இருக்கும். உலகமும் அவனைப் பாராட்டும். ஆகையால் மனிதன் எந்த நிலைமையிலும் தர்ம மார்க்கத்திலேயே இருந்துவந்தால் புண்யம், புகழ் மற்றும் மனச்சாந்தி ஆகியவற்றை அடையலாம். இதை நன்றாகப் புரிந்துகொண்டு தர்ம மார்கத்திலேயே இருந்துவர அனைவரையும் ஆசீர்வதிக்கிறோம்.
ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹா ஸ்வாமிகள்.
வேலம்மாள் பள்ளி மாணவி சாரா சி. கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறார்
வேலம்மாள் கல்வி குழமங்களின் கீழ் இயங்கி வரும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அனெக்சர் பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி சாரா சி. உலக சாதனைப் புத்தகம் சர்வதேச சாதனைப் புத்தகம் இந்திய சாதனை மற்றும் தமிழ்நாடு சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் ஒருங்கே இடம்பெறும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கண்களைக் கட்டியபடி 3 நிமிடங்களுக்குள் க்யூபை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில் வைரமுத்துவின் கவிதைகளை ஒருங்கே மனப்பாடமாக கூறினார். மாணவியின் இச்சாதனை நவம்பர் 22,ஆம் தேதி மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அனெக்சர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கடன் தொல்லை யாருக்கு?
ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள வீட்டில் கோசார குரு பிரவேசித்துச் சஞ்சரித்தால்நற்பெயரும், புகழும் கெடும். பொருளிழப்பு ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் கூடும். பங்குச் சந்தையில் இழப்பு ஏற்படலாம். கடன் தொல்லை அதிகரிக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். வீண்விரயங்கள் ஏற்படும். விரக்தியினால் நாத்திக எண்ணங்கள் மேலோங்கும்.
கிரஹணம் (பார்சுவ சூரிய கிரஹணம்)
26.12.2019 அமாவாசை கிரஹண ஆரம்பம் காலை மணி 8.09 கிரஹண மத்தியமம் காலை 9.35 கிரஹண மோட்சம் ... காலை 11.20 > மூல நட்சத்திரக்காரர்கள் கிரஹண பரிகாரம் செய்தல் > கேட்டை, பூராடம், அஸ்வினி, மகம் நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துகொள்வது நலம். > பிரதமை திதி சிரார்த்தம் அன்றே செய்யலாம்.