இயக்குனர் எம்.சுரேஷ்பாபுவின் மகள் குமாரி ஸ்ரீநிதி சுரேசின் பரதநாட்டிய அரங்கேற்றம்..!
ஸ்ரீபுரம் பொற்கோயில் இன்று உலகளவில் "ஆன்மிக சாம்ராஜ்யத்தின் மையமாக இருந்து பல லட்சம் பக்தர்களை தன்னை நோக்கி ஈர்த்து வருகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஸ்ரீபுரம் தரிசனத்திற்காக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மாவின் உன்னத திருஷ்டியான ஸ்ரீபுரம் பொற்கோயில் இயக்குனராகவும், அறங்காவலருமாகவும் இருந்து சேவை செய்து வருபவர் எம். சுரேஷ்பாபு. இவரது மூத்த மகள் குமாரி ஸ்ரீநிதி சுரேசின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மஹாலில் விமர்சையாக நடைபெற்றது.
தற்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவியான ஸ்ரீநிதி சுரேசின் பரதநாட்டிய குரு திருமதி. லட்சுமி என்.ராவ் ஆவார். இவர் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ பிருத்ய ஷேத்ரா நடன பள்ளியின் நிறுவனரும் இயக்குனருமாக இருக்கிறார்.
லட்சுமி என்.ராவ் குழந்தை நட்சத்திரமாக எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ் கபூர் ஆகியோருடன் சினிமாவில் நடித்துள்ளார். நடிகை பத்மினியின் சிஷ்யையும் ஆவார்.
இவரது பயிற்சியில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டுள்ள ஸ்ரீநிதி சுரேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஞான குரு ஸ்ரீ சக்தி அம்மா திருமுன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர்பரத்வாஜ், சென்னை கலாசேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், நடிகை பானுப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீநிதி சுரேசுடன் இணைந்து அவரது சகோதரி குமாரி ஸ்ரீரக்சிதா சுரேசும் நடனமாடினார். முன்னதாக அனைவரையும் எம்.சுரேஷ்பாபு, திருமதி. மிருநாளினி சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர். . - தீபா,வேலூர்